தடுப்பூசி காலி: பொதுமக்கள் ஏமாற்றம் போலீசாருடன் வாக்குவாதம்


பெங்களூர் மே.4- கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இன்று தடுப்பூசி போட ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு திடீரென தடுப்பூசி காலி ஆகிவிட்டது என தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். போலீசாருடனும் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தினர். பெங்களூர் மல்லதஹல்லி அம்பேத்கர் கல்லூரி அருகே ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இங்கு தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று காலை முதலே ஏராளமான பேர் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர. வெறும் 40 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி இல்லை போய் வாருங்கள் என்று கூறப்பட்டது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர் .இது என்ன நியாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சொல்கிறது அதனை பெற நாங்கள் வந்திருக்கிறோம் இப்போது தடுப்பூசி இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர் என்றாலும் பொதுமக்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் நடத்திவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றனர்