தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதி 8 பேர் பலி

பாங்காக்: ஆக. 5
n தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர்.
அந்த லாரி ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது,
வேகமாக வந்த சரக்கு ரெயில் லாரிமீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.