தண்டவாளம் அருகே மாணவர்களின் உடல்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இருந்து இரண்டு பள்ளி மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ராம் பிரவேஷ் சிங் கூறுகையில், “ ரெயில் தண்டவாளம் அருகே மீட்கப்பட்ட சடலங்கள் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ரிங்கு மவுரியா மற்றும் 11-ம் வகுப்பு படித்து வந்த அஜய் சொளராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. தண்டவாளத்திற்கு அருகில் அவர்களது மொபைல் போன்கள் அடங்கிய பை ஒன்று இருந்தது மீட்கப்பட்டது. இருவரும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டார். மேலும், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருவரும் உறவில் இருந்ததாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அவர்களது குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.