தண்ணீரில் கூட அரசியல் செய்யும் பிஜேபி துணை முதல்வர் குற்றச்சாட்டு

பெங்களூர் : மார்ச் . 15 – மாநில அரசு வறட்சி நிலையை சரியான வகையில் நிர்வகித்து வருகிறது. இது கண்டு பொறுக்க முடியாத பி ஜே பி பொய் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதுடன் இவர்கள் தண்ணீர் விஷயத்தில் அரசியல் செய்வதை கை விடுத்து மேகேதாட் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்று தரட்டும். என மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் சவால் விடுத்துள்ளார். இன்று விதான சௌதாவில் நிருபர்களிடம் மேலும் அவர் கூறுகையில் காவிரி நீர் நிர்வகிப்பு ஆணையத்தின் உத்தரவு இல்லாதபோதும் திருட்டு தனமாக தமிழ் நாட்டிற்கு காவிரி நீர் அனுப்பப்பட்டு வருகிறது என்ற எதிர் கட்சியினருக்கு பதிலளிக்க வேண்டும் என்றால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் குறைபாடு இல்லை. குழாய் கிணறுகள் தோண்டப்பட்ட பகுதிகளில் மட்டுமே தட்டுப்பாடு உள்ளது. தவிர தமிழ் நாட்டுக்கு தண்ணீர் விட்டுள்ளேன் என கூறுவது பொய் . அவர்கள் தண்ணீர் கேட்கவில்லை .
தவிர நம்மிடம் தண்ணீரே இல்லாத போது தமிழ் நாட்டுக்கு எங்கிருந்து தண்ணீர் அனுப்பி முடியும். இது பிஜேபியினரின் வெறும் அரசியல் ஸ்டண்ட் . மாநில அரசின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் எதிர் கட்சிகள் பொய் பிரசாரங்கள் செய்து வருகின்றன. தற்போதைய நிலையில் தமிழ் நாட்டுக்கும் காவிரி தண்ணீருக்கும் என்ன சம்மந்தம் தமிழ் நாட்டினர் தண்ணீர் விடுங்கள் என கேட்டிருக்கின்றனரா அவர்கள் கேட்காவிடிலும் அவர்களுக்கு தண்ணீர் விட எங்களுக்கு தலை கெட்டிருக்கிறதா. பெங்களூருக்கு சரியான அளவில் தண்ணீர் கிடைக்க திறந்து விடப்படுகிறது. மாநில அரசு வறட்சி நிலைமையை சரியான வகையில் நிர்வகித்து வருகிறது. இதை கண்டு பொறுக்காமல் எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. பெங்களூர் மத்திய பாராளுமன்ற தொகுதிக்கு பி ஜெ பி முனைவர் மஞ்சுநாத்தை நிறுத்தியுள்ளது. அவர் மீது எங்களுக்கு கௌரவம் மற்றும் மரியாதை உள்ளது இந்த தொகுதியில் டி கே சுரேஷ் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவில்லை மாறாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர் போல் பணியாற்றியுள்ளார். இவ்வாறு டி கே சிவகுமார் தெரிவித்தார்.