தண்ணீர் திறந்து விட உத்தரவு

சென்னை: மார்ச் 9:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 10.03.2024 முதல் 17.06.2024 முடிய வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து மொத்தம் 96.940 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திலுள்ள சங்கராபாளையம் எண்ணமங்கலம் மற்றும் அந்தியூர் “அ” கிராமங்களிலுள்ள 2924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.