தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி

பெங்களூர் : மார்ச் . 7 – நகரின் பியாடரஹள்ளியின் விச்வேஸ்வரய்யா லே அவுட்டில் தண்ணீர் தொட்டியில் விழுந்து ஆபத்தில் சிக்கியிருந்த இரண்டு வருட ஆறு மாத குழந்தையை போலீஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார். பைட்டரானப்புரா போக்குவரத்து போலீஸ் நிலைய பி எஸ் ஐ ஏ ஆர் நாகராஜ் என்பவர் தண்ணீரோ தொட்டியில் விழுந்த குழந்தையை காப்பாற்றியதுடன் இவருடைய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தவிர போலீஸ் இலாகாவின் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களும் இவரின் செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பணிக்கு நாகராஜ் அதே பாதையில் சென்றுகொண்டிருந்தார் அப்போது குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டியில் விழுந்து
அபாய நிலையில் இருந்தது. உள்ளூர் வாசிகள் குழந்தையை காப்பாற்றுமாறு நாகராஜிடம் கோரியுள்ளனர். உள்ளூர் மக்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் குழந்தை தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. மக்களின்
கூக்குரலை கேட்ட பி எஸ் ஐ நாகராஜ் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி பத்து அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் இறங்கி குழந்தையை காப்பாற்றி மேலே எடுத்துள்ளார். குழந்தையை அந்த நேரத்தில் காப்பாற்றியிருக்காவிடில் குழந்தை உயிரிழக்கும் அபாயத்தில்
இருந்துள்ளது. என மக்கள் தெரிவித்தனர். தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளது.