தண்ணீர் பற்றாக்குறை – சலவை தொழிலாளர்கள் பாதிப்பு

பெங்களூர், மார்ச் 14 – நாளொன்றுக்கு 1500 முதல் 2000 சம்பாதித்து வந்த நிலையில் இன்று நான்றுக்கு 500 ரூபாயும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது குழாய் கிணறுகள் வற்றிவிட்ட நிலையில் அதிகளவில் துணிகள் இருந்தும் அவற்றை சலவை செய்ய போதிய தண்ணீர் கிடைக்காமல் சலவை தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.நாள் முழுக்க ஈரமாய் இருந்த எங்கள் பகுதிகள் தற்போது படிப்படியாக உலர்ந்து வருகின்றது. இன்னும் வெய்யில் காலம் முடியும் வரை எங்கள் பாடு திடாட்டம்தான் என ஒரு சலவை தொழிலாளி குறைபட்டுக்கொண்டார். வெய்யில் காலம் துவங்கிய உடனேயே சலவை இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் ஊர் மக்களின் ஆடைகளின் அழுக்குகளை சலவை செய்து நம்மை பிரகாசமாக காட்டும் சலவை தொழிலார்கள் வாழ்வில் இப்போது இருள் சூழ்ந்துள்ளது. ராஜாஜிநகர் , மல்லேஸ்வரம் , ஸ்ரீநகர் , நாகரபாவி , குமார சாமி லே அவுட் , அலசூர் தொட்டபிதரக்கல்லு மற்றும் லக்கறே உட்பட நகரில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சலவை இடங்கள் உள்ளன. இந்த அனைத்து இடங்களிலும் தற்போது தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. பெரும்பாலான சலவை மையங்களில் இருந்த ஆழ்கிணறுகள் நாளுக்கு நாள் வறண்டு வருகின்றன. இதனால் துணிகள் சலவை செய்யும்பணி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மார்ச் இறுதிக்குள் பல சலவை மையங்கள் கதவு சாத்தப்படும் சூழ்நிலை உள்ளது. சில சலவை மையங்களில் சலவை யந்திரம் போன்ற பெரிய யந்திரங்களை பயன் படுத்தி சலவை செய்கிறார்கள். சில இடங்களில் கைகளால் துணிகளை சலவை செய்கிறார்கள் . ஆனால் இன்றைய சூழலில் இரண்டு பணிகளும் சிரமத்தில் உள்ளது என்பதே உண்மை. டேங்கர் தண்ணீர் பயன் படுத்தி சலவை செய்யும் அளவிற்கு இவர்களின் பொருளாதார நிலைமை இல்லை நகரின் பெரும்பாலான சலவை மையங்கள் நிலத்தடி தண்ணீரை மட்டுமே நம்பியுள்ள.ன இவர்களுக்கென்றே நான்கு குழாய் கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில் ன்று இவற்றில் மூன்று பழுதடைந்துள்ளது. தண்ணீர் குறைபாடு வந்ததிலிருந்து சலவை பணிகள் முடங்கியதில் ஊழியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் 40 பேர் இருந்த சலவை மையத்தில் வெறும் பத்து பேர் மட்டுமே பணிக்கு வந்து அவர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். ஊருக்கு தூய்மையான ஆடைகளை பூர்த்தி செய்து வரும் தொழிலார்களின் ஆடைகள் இன்று அழுக்கேறிய நிலையில் உள்ளன. அனைத்து சலவை மையங்களிலும் வெய்யில் காலங்களில் தண்ணீர் பிரச்சனையை ஏற்படுகிறது இதற்கு ஒரு நிரந்தர நிவாரணத்தை .ஆழ் கிணறுகளை தோண்டுவது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும். எங்கள் குறைபாடுகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்ததும் அதில் ஒரு சில மட்டுமே ஈடேறியுள்ளது மற்றவை அப்படியே கிடப்பில் உள்ளது என சலவை தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.