தந்தை இரண்டு மகன்கள் நீரில் மூழ்கி பரிதாப சாவு

பெல்காம், மார்ச் 11: ராய்பாக் தாலுகாவின் நிடகுண்டி கிராமத்தில் பண்ணைக் குட்டையில் நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்ற‌ தந்தையும், 2 மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
பெல்காம் மாவட்டம் நிடகுண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லப்பா பசப்பா கனிகேரா (39), அவரது மகன்கள் மனோஜ் கல்லப்ப கனிகேரா (11), மதனா கல்லப்ப கனிகேரா (9) ஆகியோர் உயிரிழந்தனர்.
கல்லப்பா, பசப்பா கனிகேரா அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததால், நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால், தந்தையும் குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். கல்லப்பா தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முடிவு செய்து பிற்பகல் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
மாலை ஆகியும் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் அவர்களை தேடினர். கடைசியாக விவசாய குட்டையில் மூழ்கி இறந்ததாக தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்கு பதிந்த ராயபாக் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.