தந்தை பெரியார் நினைவிடத்தில் சித்தராமையா மரியாதை

சென்னை,ஜூலை.31
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சித்தராமையா மரியாதை செலுத்தினார். மேலும் சென்னையில் உள்ள பெரியார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், விருது வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.அம்பேத்கர் சுடர்’ விருது, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. விருதுகளை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார்
இந்த நிலையில் சென்னையில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு இன்று காலை சித்ராமையா வந்தார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெரியார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். சித்ராமையாவை திராவிடர் கழக தலைவர் கி வீரமணி வரவேற்றார்
சென்னையில் உள்ள திராவிட இயக்க தந்தை பெரியாரின் சமாதியான இடத்திற்கு சித்தராமையா இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் சித்ராமையாவுடன் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரேவண்ணா முன்னிட்டு சென்று இருந்தனர். திராவிடர் கழகம் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தந்தை பெரியாரின் கொள்கை பரப்பு பணிகளை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வெகுவாக பாராட்டினார்.