தந்தை மகன் தற்கொலை

மண்டியா, ஜன. 14 – குடும்ப தகராறால் வெறுத்து போய் தந்தை மற்றும் மகன் பள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாக மண்டலா தாலூக்காவின் லாலெனகெரே என்ற கிராமத்தில் நேற்று இரவு நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்துவந்த கங்காதாரகௌடா (35) மற்றும் அவருடைய மகன் ஜஸ்வித் (7) ஆகியோர் தற்கொலை செய்துகொண்டவர்கள். மனைவியின் தகாத உறவு மற்றும் அதனால் அடிக்கடி உண்டான வாக்குவாதங்களால் வெறுத்துப்போன கணவன் தன மகனுடன் மரண வாக்குமூலம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடிக்கடி வீட்டில் சண்டைகள் நடந்து வந்துள்ளது. இதற்கு முன்னரும் கிராம பெரியவர்கள் பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால் நேற்று கணவன் மனைவிக்கிடையே சிறிய காரணங்களுக்க்காக சண்டை நடந்துள்ளது தொடர்ந்து சண்டைகள் வருவதால் வெறுத்து போன தந்தை மற்றும் மகன் நேற்று இரவு கிராமத்தின் புறப்பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். என்னுடைய மற்றும் என் மகனின் சாவுக்கு என் மனைவியே காரணம் அவரை இது விஷயமாக தண்டிக்க வேண்டும் என மரண வாக்கு மூலம் எழுதி வைத்து விட்டு கயிற்றால் கை கால்களை கட்டிக்கொண்டு பள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இரவே இவர்களை நண்பர்கள் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இன்று காலை கிராம புறப்பகுதியில் உள்ள பள்ளத்தில் செருப்பு , மரண வாக்குமூலம் மற்றும் மொபைல் போன் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு பின்னர் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கையில் இறங்கி தந்தை மற்றும் மகனின் உடலை கண்டெடுத்து உள்ளனர்.