த‌னக்கு டிக்கெட் கிடைக்காமல் தடுக்க சதி: ஷோபா குற்றச்சாட்டு

பெலகாவி, மார்ச் 9: உடுப்பி-சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தல் சீட்டைத் கிடைக்காமல் தடுக்க‌ சதி நடப்பதாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
பெலகாவியில் பேசிய அவர், கட்சிப் பணிகளையும், ஆட்சிப் பணிகளையும் செய்த திருப்தி எனக்கு உள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும். வேலை செய்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சில சமயங்களில் சாதிய ஒருங்கிணைப்பின் காரணமாக இது வேறுபட்டிருக்கலாம். நமது உழைப்பை கட்சியின் உயர்மட்டக் குழு அங்கீகரிக்கிறது என்பதற்கு நான் ஒரு உதாரணம். உடுப்பி-சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தல் சீட்டைத் கிடைக்காமல் தடுக்க‌ சதி நடைபெறுகிறது. எனக்கு எதிரான சதியால் நான் பயனடைவேன். சதி நடக்கும் போதுதான் உயர்மட்ட குழு எங்களை கவனிக்கிறார்கள். ஏன் எதிர்க்கிறார்கள் என்று அறிக்கை கொண்டு வருவார்கள் அப்போதுதான் உண்மை தெரியும். எனது தொகுதியில் பல பணிகளை செய்துள்ளேன், வளர்ச்சியின் அடிப்படையில் வாக்கு கேட்பேன் என்றார்.மக்களவைத் தேர்தலில் பல சிட்டிங் பாஜக‌ எம்.பி.க்கள் டிக்கெட்டை இழக்க நேரிடும் என்ற விவாதம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வெற்றி பெற்ற கட்சியிடம் பலர் சீட்டு கேட்பது இயல்புதானே, தவறில்லை. பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த எங்கள் தொண்டர்களுக்கு சீட்டு கேட்க உரிமை உள்ளது.