தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பிரம்மாண்ட பேரணி


பெங்களூர் பிப்.23- பெங்களூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஊர்வலம் நடத்தினர் இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்கவும், ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை ரத்து செய்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தியும் இன்று காலை போராட்டம் நடந்தது.
சுதந்திர பூங்காவில் துவங்கிய இப்போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் வலியுறுத்தினர்