
பெங்களூரு, நவ. 18- பெங்களூரு மாநகராட்சி தனியார் தங்கும் விடுதிகளை விதிமுறைகளின் கீழ் கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெங்களுரில் தனியார் தங்குமிடங்களின் (பிஜி) எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இவற்றை ஒழுங்குமுறை விதிமுறைகளின் கீழ் கொண்டு வர பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) முடிவு செய்துள்ளது. தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல குடியிருப்பு நல அமைப்புகள் மற்றும் குடிமக்கள் குழுக்களின் புகார்களைத் தொடர்ந்து, பிபிஎம்பி எத்தனை குடியிருப்புகள் தங்கும் விடுதிகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வு மேற்கொண்டுள்ளது. இது எந்த அரசு நிறுவனத்தாலும் தொடப்படாத ஒரு பிரிவு இந்த தங்குவிடுதிகள். பல கட்டிடங்கள் பணமாக்குவதற்காக தங்கும் விடுதிகளாக மாற்றப்படுகின்றன. பெரும்பாலும் வெளியூர் மாணவர்கள் மற்றும் இளம் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் இங்கு தங்குகின்றனர். சில தங்கும் விடுதிகள், இடிந்த கட்டிடங்களில் இருந்து செயல்படுகின்றன. தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதிக வாடகை வசூலிக்கப்படுகிறது என்று பிபிஎம்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிபிஎம்பி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் கூறுகையில், பி.ஜி.களை நிர்வகிக்கும் வழிகாட்டுதல்கள் தற்போது இல்லை. அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். புதிய விதிகள் ஒரு அறையில் அதிகளவில் தங்குபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறைகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும் சுகாதார விஷயங்களும் ஆராயப்படும்.விருந்தினர்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லை என்பதையும், ஒரு அறை அல்லது வசதி சிறந்த முறையில் வைத்திருப்பதை விட உரிமையாளர்கள் அதிகமான மக்களை தங்க வைக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிந்தோம். பிபிஎம்பிக்கு மக்கள் தங்கும் விடுதிகளுக்கு எதிராக புகார்களும், நெரிசலான வசதிகள் கொண்ட தங்கும் விதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறப்பட்டுள்ளது. தங்களின் வீடுகளின் அருகில் உள்ள தங்கும் விடுதியின் ஜன்னலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீடுகளில் வசிப்பவர்கள் புகார் அளித்துள்ளனர். பகிர்ந்தளித்த விடுதியில் சுகாதாரமற்ற கழிப்பறை இருந்ததால் துர்நாற்றம் வீசிவது தெரியவந்துள்ளது என்றார். ஒரு சில குறிப்பிட்ட பிஜிகளுக்கு எதிராக மட்டுமே புகார்கள் இருந்தாலும், பிபிஎம்பியின் இந்த நடவடிக்கை அனைத்து தங்கும் விடுதிகளையும் பாதிக்கும். பெங்களூரு தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, நகரத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தங்கும்விடுதிகள் உள்ளன. அவை 17 லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பும், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடமளிக்கின்றன. ஏற்கனவே பல ஏஜென்சிகள் தங்கும் விடுதிகளின் செயல்பாடுகளைக் கவனித்து வருகின்றன. “பெரும்பாலான தங்கும் விடுதி உரிமையாளர்கள் வர்த்தக உரிமம் பெற்றுள்ளனர். பிபிஎம்பி ஏன் திடீரென எங்கள் மீது கவனம் செலுத்தியது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தனி விதிகள் அல்லது வழிகாட்டுதல்கள் தேவையில்லை. உண்மையில், பிபிஎம்பி மற்றும் பிற அரசு நிறுவனங்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதால், எங்கள் வணிகத்தை ஆதரிக்க வேண்டும். பெங்களூரில் வாடகைகள் உயர்ந்து வருவதால், முதுநிலை படிப்புகள் இல்லாத தனிநபர்களுக்கு குடியிருப்பு ஏற்பாடுகளை செய்வது சாத்தியமற்றது. பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் பிஜிக்கள் சிக்கனமானவை தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருண் குமார் தெரிவித்தார். தங்கும் விடுதி உரிமையாளர்கள், அதிக வாடகையை வசூலித்தாலும், தங்கும் விடுதிகள் கருவூலத்திற்கு பங்களிப்பதில்லை. நகரின் புறநகரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் பட்டாக்கள் இல்லாத கட்டிடங்களில் இருந்து செயல்படுகின்றன. ஒரு சில தங்கும் விடுதிகள் தங்களை வணிக நிறுவனங்களாக அறிவிக்காமல், தண்ணீர் மற்றும் மின் நுகர்வுக்காக வீடுகளுக்கான குறைந்த கட்டணம் செலுத்துகின்றன என்று பிபிஎம்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.