தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தேவையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூர் : ஏப்ரல் 1- பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளன. இதனால் அனைத்து இடங்களிலும் தேர்தல் ஆணையம் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது . எந்த நிகழ்ச்சிகள் நடத்தினாலும் வட்டார தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் திருமணம் உபநயனம் மற்றும் பூணுல் பண்டிகை உட்பட தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தேவையில்லை. பொது மக்களை அழைக்கும் தேர்த்திருவிழா ஊர்ப்பண்டிகை ,, கம்பலா, யக்ஷகானா , கிரிக்கெட் போன்ற போட்டிகளுக்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர வீட்டில் குடும்பத்தார் மட்டுமே இனைந்து நடத்தும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தேவையில்லை. நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் அங்கு அனுமதிக்கான விண்ணப்ப படிவம் பெற்று அழைப்பிதழ் , சம்மந்தப்பட்ட நபரின் ஆதார் எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும். படிவத்தை இந்த விவரங்களுடன் நிரப்பிவடிக்கையாளர் சேவா மையங்களில் ஆன் லைன் வாயிலாக சவுண்ட் சிஸ்டம் செலான் 75 ரூபாய் செலுத்த வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் தேர்தல் அதிகாரி அலுவலகம் சென்று விண்ணப்பம் கொடுத்து ஓரிரு நாட்களில் அங்கிருந்தது அனுமதி கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என மங்களூர் மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் விளக்கியுள்ளார். மாநிலத்தில் இரண்டு கட்டமாக ஏப்ரல் 26 மற்றும் மே 6 தேர்தல்கள் நடப்பதால் மே 7 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.தேர்தல் ஆணைய விதிமுறைப்படி எந்த விகிதத்திலும் யாரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறக்கூடாது , தனிநபர்கள் தங்கள் இல்லத்தில் நடத்தும் நிகழ்ச்சிகளில் வேட்பாளர்களை தாக்கி பேசுவது அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கூடாது. உள்ளூரில் நிறுவனங்கள் மற்றும் அரசு மைதானங்களில் நிகழ்சசிகள் நடத்துவதென்றால் அதற்கேற்ற அனுமதி பெற்றாகவேண்டும். நிகழ்ச்சிகள் மட்டும் விழாக்கள் குறித்து பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது தோரணங்கள் கட்ட கூடாது. இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.