தனியார் பஸ்களில் அலைமோதிய கூட்டம்


பெங்களூர், ஏப். 7- கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ்கள் ஓடவில்லை குறிப்பாக பெங்களூரில் பஸ்கள் இல்லாமல் பயணிகள் பரிதவித்தனர் இவர்களின் வசதிக்காக அரசு தனியார் பஸ்களை இயக்கியது தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது சில பஸ்களில் கட்டணம் இரட்டிப் பாக வசூலிக்கப் பட்டதாக பயணிகள் புகார் கூறினர். ஆனால் இதை தனியார் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் மறுத்தனர்.