தனியார் வாகனங்கள் பந்த்

பெங்களூரு, செப்.11- தனியார் வாகன போக்குவரத்து சங்கங்கள் இன்று நடத்திய பன் போராட்டத்தால் பெங்களூர் திணறியது பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தனியார் பஸ்களுக்கும் சக்தி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் அல்லது சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், ரேபிடோ பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு இன்று பந்த் போராட்டம் நடத்தியது. இதனால் தனியார் பஸ்கள் டாக்ஸிகள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளது.
பந்த் காரணமாக, 4 லட்சம் ஆட்டோக்கள், 2 லட்சம் டாக்சிகள், 30 ஆயிரம் சரக்கு வாகனங்கள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள், 90 ஆயிரம் மாநகர டாக்சிகள், கார்ப்பரேட் நிறுவன பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை
ஓலா, உபேர் ஆட்டோ டாக்ஸிகளும் ஓடவில்லை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்து நடத்துனர்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் இதனால் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வருகை குறைந்தது. நிறுவனங்கள் அலுவலகங்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் வாகனங்களில் செல்லும் ஐடிபிடி ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர் நகரில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் இந்த தனியார் போக்குவரத்து பந்த் காரணமாக, நகருக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பந்த் சமயத்தில், பெங்களூரு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக 500 பிஎம்டிசி பேருந்துகள் 4,000 டிரிப்கள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
40க்கும் மேற்பட்ட தனியார் போக்குவரத்து அமைப்புகள், அரசுக்கு எதிரான கோபத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தும் வகையில், பெங்களூரு பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளன.மாநகரில் ஆட்டோ, கேப், வேன், சரக்கு வாகனம் உள்ளிட்ட தனியார் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. மெஜஸ்டிக் கேஎஸ்ஆர்டிசி ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ கூட காணப்படவில்லை.
அதிகாலையில், பல்வேறு ஊர்களில் இருந்து மெஜஸ்டிக் வரும் மக்கள் ஆட்டோக்களுக்குப் பதிலாக பிஎம்டிசி பஸ்களை நோக்கி திரும்பினர். அதிக லக்கேஜ்களை வைத்துக்கொண்டு, பஸ்சில் செல்ல முடியாமல், ஆட்டோ தேவைப்படுவதால், பயணிகள் பெரும் சிரமப்பட்டனர்
மாநகரில் தனியார் போக்குவரத்து தொழிற்சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை, தனியார் வாகன போட்டிகள் மடிவாளாவில் இருந்து பேரணியாக புறப்பட்டு சுதந்திர பூங்கா வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்லையில் வாகனங்களை மறித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனங்களை நிறுத்தினால் வழக்குப்பதிவு செய்வதாக எச்சரித்தார். பந்த்க்கு ஆதரவளிக்காத கேப் ஓட்டுநர்கள் ஓl மீது முட்டைகளை வீசி ஆத்திரத்தை வெளிப்படுத்திய சம்பவம் ஹெப்பாலில் இடம்பெற்றுள்ளது.
ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் சில ஆட்டோக்கள் இயக்கப்பட்டது அவர்களை மற்ற டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நகரில் காலை ஏழு மணி முதல் ஆட்டோ போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகாலையில் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்களை தடுத்து மற்ற டிரைவர்கள் மறியலில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக கலாசிபாளைய தனியார் பேருந்து நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலைக்கு வரவில்லை. சக்தி யோஜனா திட்டத்தால் தனியார் பேருந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கதறி அழுதனர். இது பார்ப்பதற்கு உருக்கமாக இருந்தது கர்நாடகா அரசு எங்களை வஞ்சித்து விட்டது எங்கள் வயிற்றில் அடித்து விட்டது அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்து எங்கள் தொழிலை முடக்கி விட்டது எனவே எங்களுக்கு மாதம் தோறும் அரசு மானியம் வழங்க வேண்டும் அதை தவிர பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது