தன்னை யாரும் கடத்தவில்லை!: உ.பி. பாஜக எம்.எல்.ஏ. வினய் சாக்யா மறுப்பு

லக்னோ, ஜன. 12- தன்னை யாரும் கடத்தவில்லை என்று பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் வினய் சாக்யா மறுப்பு தெரிவித்திருக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவாமிபிரசாத் மவுரியா உடனேயே தான் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ. சாக்யா குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியில் சேர உள்ளதாகவும் பிதுனா தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான வினய் சாக்யா கூறியுள்ளார்.