புதுடெல்லி செப்.21-
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழக அரசுக்கு 5 அயிரம் கனஅடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மைக் குழுவின் உத்தரவுக்கு அடுத்த 15 நாட்களுக்குத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கர்நாடக மாநிலம் அதிர்ச்சி அடைந்து உள்ளது காவேரி விவகாரத்தில் இது கர்நாடகத்திற்கு பின்னடைவு ஆகும். கர்நாடக மாநிலத்தில் இந்த முறை சரிவர மழை பெய்யாத கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்முன்னதாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கூடி தமிழகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது இந்த நிலையில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை உறுதி செய்தது. காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காவிரியில் தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் மேலாண்மைக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மற்றும் பரிந்துரையில் உடன்பாடு இல்லை என்று கூறுவது சரியல்ல என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த இரு குழுக்களின் உத்தரவையும் ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இன்று நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்து, தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரினார். கர்நாடகாவுக்கு பாதுகாப்பு அளித்து மாநிலத்தில் பருவமழை பெய்து வருகிறது. நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லை. எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றுவது கடினம் என்றும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் இறுதியாக 5,000 கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.