தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,நவ.4-
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

  • செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், அரசு கேபிள் மேலாண் இயக்குனராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நிர்வாக சீர்த்துறை செயலாளராக சகாய மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக சரவண வேல்ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.