தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் முழு அடைப்பு

தஞ்சாவூர்:அக். 11- கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள் மற்றும் பாஜகவைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தின்போது, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.