தமிழகத்தில் தொடரும் கனமழை

சென்னை நவம்பர் 12
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல மாவட்டங்கள் மழை பாதிப்புகளால் முடங்கி உள்ளது இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது .இன்றும் பல்வேறு மாவட்டங்களிள்பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று அது கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது . கடந்த மூன்று நாட்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்றும் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதே போல பல்வேறு மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளை மறுநாள்வரை மழை அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை கொட்டி வருகிறது தமிழ்நாடு முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் கனமழை கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ராட்சத மரம் சாலையில் விழுந்தது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
நேற்றுகாலை 10 மணி அளவில் கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதியான பண்ணைக்காடு – தாண்டிக்குடி பிரதான சாலையில், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.
கனமழைக்கு வடமதுரை அருகே கலர்பட்டியில் தென்னை மரம் முறிந்து உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்தது. இதனால் 4 மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. பொதுமக்கள் நடமாட்டம் குறைவால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் 80 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரத்துறை ஊழியர்கள் மின்கம்பங்களை விரைவாக அப்புறப்படுத்தினர். தற்காலிகமாக மாற்று மின்சார வழி மூலம் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது….
மீண்டும் தமிழத்துக்கு கனமழை காத்திருக்கிறது.
வங்கக்கடலில் தற்போது நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழையை கொடுத்து வருகிறது. 14ந் தேதி வரை இது நீடிக்கக்கூடும்.
இதைத் தொடர்ந்து அடுத்த காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் , அப்போது மிகக் கன மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைநீர் அகற்றும் பணிக்கு சென்னையில் 910 மின் மோட்டர்கள் சென்னையில் சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற 500 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது தீவிர மழை தொடங்கியதை அடுத்து தண்ணீரை அகற்றும் பணிக்கான மின் மோட்டார்களின் எண்ணிக்கை 910 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.