தமிழகத்தில் மேலும் 4,295 பேருக்கு கொரோனா:கிருஷ்ணகிரி 69; தர்மபுரி 75

கிருஷ்ணகிரி அக்.17-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக தொற்று நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 6,834869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 672502 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 10,586 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரு நாளில் 5005 பேர் டிஸ்ஜார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 57 பேர் பலியாகியுள்ளனர்