தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிப்பு

சென்னை: ஏப்ரல். 11 – தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில். சென்னையிலும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவாகி வருகிறது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும்.
கிழக்கிலிருந்து வரும் காற்றே இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டிலும் கூட வெப்ப நிலை சற்று குறையும். இங்கெல்லாம் தொடர்ந்து 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியல் வரை பதிவாகி வருகிறது. கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும். சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.