தமிழகத்தில் 1663 பேருக்கு கொரோனா: கி.கிரி 10; தருமபுரி 16

கிருஷ்ணகிரி, நவ.21-
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் 1663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது இதில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 18 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2133 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொற்று பாதிப்பு ஏற்படுபவர்களை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் தொடர் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 12,916 ஆக குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை 7 ஆயிரத்து 222 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 112 பேர் இறந்துள்ளனர் ஒரே நாளில் 10 பேர் புதியதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 260 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரை பாதிப்பு எண்ணிக்கை 5,947 ஆக உள்ளது ஒரே நாளில் 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் 135 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.