தமிழகத்தில் 71. 79 சதவீத வாக்குப்பதிவு


சென்னை ஏப்ரல் 6-
தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவுவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும்” என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.