தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: ஜூன் 12-
மத்திய அரசின் வரி வருவாய் பகிர்வாக மாநிலங்களுக்கு ரூ.1.39லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ள தாக நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது. இதன் மூலம், மாநில அரசுகள் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூலதன செலவுகளை விரைவுபடுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டின்படி, தமிழகத் துக்கான வரி பகிர்வாக ரூ.5,700.44 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிகஅளவாக உத்தரப் பிரதேசத்துக்குவரி பகிர்வாக ரூ.25,069.88 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவாவுக்கு ரூ.539.42கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திராவுக்கு ரூ5,655.72 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.5,096.72 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,690.20 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.2,937.58 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு ரூ.10,513.46 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.8,421.38 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.10,970.44 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் 28 மாநிலங்களுக்கு ரூ.1,39,750.92 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிவிப்பின்படி மாநிலங்களுக்கு ரூ.12.19 லட்சம் கோடி பகிர்ந்தளிக்கப்பட வேண்டியுள்ளது. இதில், ஜூன் 10 வரையில் ரூ.2.8 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் நிர்ணயித்துள்ள கணக்கீட்டின்படி மத்திய அரசுதனது வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. 15-வது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தகணக்கீடு 2026-ம் நிதியாண்டு வரை அமலில் இருக்கும்.2027 முதல் 2031 காலகட்டத் துக்கான வரிப் பகிர்வுக்கான கட்டமைப்பை அரவிந்த் பனகாரியாதலைமையிலான 16-வது நிதிக் குழு உருவாக்கி வருகிறது.