தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் – திமுகவில் பரபரப்பு

சென்னை;.டிச. 22-
2024 லோக்சபா தேர்தல் வருவதற்கு முன்.. அல்லது முடிந்த சில வாரங்களில் தமிழ்நாடு அரசியளிக் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் திமுக அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து சிறைக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கிறார். அதேபோல் அமைச்சர் பொன்முடிக்கு தற்போது 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது.
அவகாசம்: மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினார். அதற்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன் நடந்த நிகழ்வு அது என்று நீதிபதி பதிலளித்தார். இந்த வழக்கில்தான் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சரவை மாற்றம்: சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2024 லோக்சபா தேர்தல் வருவதற்கு முன்.. அல்லது முடிந்த சில வாரங்களில் தமிழ்நாடு அரசியளிக் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர். சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இவர்களை அடுத்தடுத்து கைது கூட செய்ய வாய்ப்புகள் உள்ளன.
சீனியர்களை கைது செய்து மொத்தமாக கட்சியை முடக்கும் திட்டங்களில் இவர்கள் ஈடுபடலாம். அதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும். தேர்தல் நேரத்தில் பாஜக இந்த திட்டத்தை களமிறக்க நினைக்கலாம். இப்படி செய்து ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தலாம். திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று நினைக்கலாம். அதற்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் மனதில் இன்னொரு திட்டம் உள்ளது. ஸ்டாலின் மனதில் பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது. ஸ்டாலின் திட்டம்: அவர்கள் கண்டிப்பாக இந்த ரெய்டுகளை தொடருவார்கள். இவர்கள் எல்லாம் திமுகவின் பண வங்கி. அவர்கள் திமுகவிற்கு பேங்க் போல செயல்படும் நபர்கள். அதனால் இங்கே ரெய்டு நடத்துகிறார்கள். பாஜகவின் குறி இவர்கள்தான். இவர்கள் எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்துவிட்டார்கள் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மற்றப்படி ரெய்டு மூலம் எதுவும் நடக்காது. வருமான வரித்துறை ரெய்டு காரணமாக பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தால் அது சிக்கல் ஆகும். இந்த ரெய்டுகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். திமுகவிற்கு வரக்கூடிய பணத்தை கட் செய்ய வேண்டும். திமுகவிற்கு பணம் செல்ல கூடாது என்பதை மனதில் வைத்தே பாஜக இந்த ரெய்டுகளை ஏவி விட்டு உள்ளது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க ஸ்டாலின் திட்டத்தின் படி முதலில் இருக்கும் 10 சீனியர்களை பார்ட்டி வேலைக்கு இறக்கலாம். தேர்தல் பணிகளை கொடுக்கலாம். மந்திரி பதவிகளை பறிக்கலாம். அவர்களை கட்சியில் முன்னுக்கு கொண்டு வரலாம். இளம் நபர்களை அமைச்சர்கள் ஆக்கலாம். சீனியர்களுக்கு கட்சியில் முன்னுரிமை. இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்கள் பதவிகள். இளைஞர்களை அமைச்சர் பதவிக்கு கொண்டு வந்து மாற்றம் செய்யலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் மொத்தமாக இளைஞர்களை களமிறக்கி டிரையல் பார்க்கலாம் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.