தமிழக அமைச்சரவை முக்கிய ஆலோசனை

சென்னை: ஜனவரி. 23 – பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று 23-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் இந்த அமைச்சரவை கூட்டம் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை எம்பி தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலுக்கான மும்முரங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன..
அதேபோல, வரும் பிப்ரவரி மாதம், சட்டப்பேரவை கூட்டத்தொடரும் ஆரம்பமாக உள்ளது.. எனவே, இந்த கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது குறித்த விஷயங்கள் இன்றைய தினம் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு: அதேபோல, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. கடந்த வருடம் பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது.