தமிழக கவர்னர் டெல்லி விரைந்தார்

சென்னை , நவ.3
தமிழக கவர்னர் ஆர் என் ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டெல்லியில் இரண்டு நாள் தங்கி இருந்து முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
தமிழக கவர்னர் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஏற்கனவே அவர் தமிழ் மொழி, மதம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின .
இதை அடுத்து கோவை கார் வெடிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நேற்று திமுக சார்பில் குடியரசு தலைவரிடம் கவர்னரை மாற்ற கோரி மனு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மனுவில் திமுக எம்பிக்களும் , தோழமைக் கட்சி எம்பி களும் கையெழுத்திட வருமாறு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள் விடுத்தார் .இதனை ஏற்று முதல் ஆளாக மதிமுக எம்பி வைகோ கையெழுத்து போட்டார். மேலும் தமிழக கவர்னர் மாளிகையில் கவனர்னர் நடத்திய தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது. அந்த விருந்துக்கு ரூபாய் 22 லட்சம் செலவானது தகவல் வெளியாகி உள்ளது .இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் உள்துறை மஞ்சள் அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது
பிரதமர் , ஜனாதிபதி ஆகியோரை கவர்னர் சந்திக்க உள்ளார்.