தமிழக கவர்னர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: ஜன.27-
தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம். சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலை. கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணியிடம் தற்போதுவரை காலியாக உள்ளது. அவற்றுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநரின் பார்வைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளைத்தான் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் பின்பற்ற வேண்டும்.அந்த குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டி இருந்தார். ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்ய யுஜிசி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேடுதல் குழுக்களை அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.