தமிழக மக்களுக்கு ஸ்டாலின் நன்றி


சென்னை.மே.2-
தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்! ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள் என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்! தமிழ்மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – எத்தனை பழிச்சொற்கள் – எத்தனை அவதூறுகள் – என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!
இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி! ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது! – அதைத் தமிழகம் இன்று சொன்னது! இனித் தமிழகம் வெல்லும்! – அதை நாளைய தமிழகம் சொல்லும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[5/2, 9:37 PM] Thangamani: கர்நாடகத்தில் இன்று 33,733 பேர் பாதிப்பு 217 பேர் சாவு

பெங்களூர், மே 2: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று, 33,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 217 பேர் பலியானார்கள்.
பெங்களூரில், 21,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் இறந்தனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சுகாதார புல்லட்டின் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16011 ஆக உயர்ந்துள்ளது. இன்று 21,149 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். கர்நாடக மாநிலத்தில் கோரோனா வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது