தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேசுவரம்: நவ. 10: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த அக். 14-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற கென்னடி, பாஸ்கர் ஆகியோரது 2 விசைப் படகுகளையும், அதிலிருந்த 15 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.அதேபோல, அக். 28-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மெக்கான்ஸ், மரிய சியா, ராமகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.இந்த 38 மீனவர்கள் மீதும்எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.