தமிழர்கள் அச்சத்தை தவிர்க்க வேண்டும்: பேராசிரியர் கி.பார்த்திபராஜா

பெங்களூரு, டிச. 8: தமிழர்கள் அச்சத்தை தவிர்க்க வேண்டும் என்று திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திபராஜா தெரிவித்தார்.தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் 7 வது நாளான நேற்று, பிரபல பெண் எழுத்தாளர் ஜெய்சக்தி எழுதியுள்ள ‘‘கனவொளியில் ஒரு பயணம்’’ என்ற நூலை கவிமலர் மலர்மன்னர் வெளியிட, கல்வியாளர் மதுசூதானபாபு பெற்று கொண்டார். எழுத்தாளர்கள் கே.ஜி.இராஜேந்திரபாபு, கவிஞர் சே.குணவேந்தன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். நூலாசிரியர் ஜெய்சக்தி ஏற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து பாவரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெய்சக்தி நடுவராக இருந்து நடத்திய பாவரங்களில்உள்ளார். நூலைப்படி என்ற தலைப்பில் பாவலர்கள் கா.உ.கிருஷ்ணமூர்த்தி, புலவர் கார்த்தியாயினி, பாபு சசிதரன், சே.குணவேந்தன், ஆர்.ஜோதிஹரிஷ், லுானசுந்தரம், சௌரி, பெரு.இராமகிருஷ்ணன், எம்.பாஸ்கர், மதியழகன் ஆகியோர் கவிதை பாடினர். க.தினகரவேலு நன்றியுரை ஆற்றினார்.அதை தொடர்ந்து சிந்தனை களம் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயா வெங்கடராமன், தமிழுணர்வு பாடகர் ஔிமலரவன் வாழ்த்துவரை வழங்கினர். சரித்திர தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் பேராசிரியர் கி.பார்த்திபராஜா உரையாற்றினார்.உரையில் மெல்ல இனித் தமிழ் சாகும் என பலரும் கூறி வருகின்றனர். இது போன்ற தமிழ்ப் புத்தகத்திருவிழாக்களால், தொடர்ந்து தமிழ் வாழும். பாரதியார் கூறிகிறார் அச்சம் தவிர் என்று. தமிழர்கள் அச்சத்தை தவிர்க்க வேண்டும்.
கர்நாடக தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் தங்களின் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றைத் தெரிந்து கொண்டால் மட்டுமே தங்களின் பாரம்பரியம் என்றவென்று அனைவருக்கும் புரியும். தமிழ், தமிழர்களின் பாராம்பரியம் தொன்மை வாய்ந்தது என்பதனை உலகிற்கு புரிய வைக்க வேண்டும். தமிழ்ப் புத்தகத்திருவிழாவில் நூல்களை வாங்கி படிக்கும் போது மட்டுமல்ல, எங்கு, எப்போது நூல்கள் படித்தாலும், ஏன் என்ற கேள்வி எழுப்ப வேண்டும். ஏன் என்ற கேள்வி எழுப்பினால் மட்டுமே அதற்கான விடை கிடைக்கும். தமிழ்நாட்டில் புத்தக திருவிழா நடத்துவது எளிது. ஆனால் கர்நாடகத்தில் இந்த புத்தகத் திருவிழாவை தமிழ்ப் புத்தகத் திருவிழாவை தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்கள் முயற்சியை பாராட்ட வேண்டும் என்றார்.முன்னதாக பேசிய கர்நாடக பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன், எத்தனை இடர்கள் வந்தாலும், தமிழ் பத்திரிகை திருவிழாவை தொடர்ந்து நடத்துவோம். நாங்கள் ஒருபோதும் தளர்ந்துவிட மாட்டோம். இதற்கு பெங்களூரு தமிழர்கள் மட்டுமின்றி, கர்நாடக முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.