தமிழிசைக்கு ஆதரவு

சென்னை: ஏப். 12: தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கோயம்பேடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கோயம்பேடு வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜி.டி.ராஜசேகர் மற்றும் 37 வணிகர் சங்க நிர்வாகிகள் நேற்று ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: கோயம்பேட்டை சேர்ந்தஅனைத்து தரப்பு வியாபாரிகளும் எனக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் எப்போதும் வணிகப் பெருமக்களுடன் இணைந்து பணியாற்றுபவள். இங்கு கடுமையாக உழைக்கும் நபர்களுக்கு ஓய்வு அறை, தண்ணீர் வசதி, கழிப்பறை, உணவகங்கள் கிடையாது. இவர்களுக்கான வசதிகளை அமைத்துக் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
கோயம்பேடு மார்க்கெட் விஞ்ஞானப் பூர்வமான வணிக வளாகம் மாதிரி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், முன்னேற்றுவதற்கும் முற்றிலும் உதவி செய்வேன். மாற்றம் வந்துவிடும் என்பதால்தான் திமுகவும், அதிமுகவும் எங்களைப் பற்றியேபேசிவருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.