தமிழ்நாடு கவர்னர் திடீர் டெல்லி பயணம்

சென்னை, பிப். 19: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த திடீர் பயணத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
தமிழ்நாடு சட்டமன்றம் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால், கவர்னர் ரவி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். இது அன்றைய தினம் பேசுபொருளாகியது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், முன்னதாகவே தமிழ்நாடு கவர்னர்
ஆர்.என். ரவி, திடிரென டெல்லி புறப்பட்டுச் சென்றள்ளார்.
இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.4 நாள் டெல்லியில் தங்கும் ஆர்.என். ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வியாழக்கிழமை தமிழ்நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட‌ நிலையில், ஆளுநர் ரவியின் திடீர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.