தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலவச முகாம்

வாணியம்பாடி, ஏப்.17
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ் மாதேஸ்வரன் மற்றும் நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வாணியம்பாடி தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இதில் மாநில துணைத்
தலைவர் ஸ்ரீதரன், மாவட்டதலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர்
AGS. செந்தில்முருகன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இளைஞர் அணி அருண்குமார்

மாவட்ட செய்தி தொடர்பாளர்
பத்மநாபன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இதில்
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தனர்.
இதில் வணிகர்கள்,காய்கனி வியாபாரிகள்,சாலையோர வியாபாரிகள்,பொதுமக்கள் என சுமார் 600 க்கும் மேற்பட்டோர் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகை தந்த அனைவரையும் சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவராக அழைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சீனிவாசன், உணவக உரிமையாளர்கள் சங்கம் குமரகுரு, நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ், களப்பணி மேற்பார்வையாளர் சரவணன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் அருள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில்
வாணியம்பாடி தொழில் வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர்
செல்வமணி நன்றி கூறினார்.