தமிழ்நாட்டில் கன மழை

சென்னை மே 23: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லையில் ஆகிய 8 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.