தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு ரூ. 1,000 ரொக்கமாக வழங்கப்படும்

சென்னை நவம்பர் -9 தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசு வழங்க பணத்திற்கு பதில் பொங்கல் பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது .
இதில் ரூபாய் 1000 மதிப்புள்ள பொருட்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கினார்கள் .
ஆனால் அதில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமாக இல்லை என்ற புகார்கள் எழுந்தன .இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வரும் போது பொங்கல் பொருள் வழங்குவதற்கு பதில் ரூபாய் ஆயிரம் ரொக்கமாக வழங்க அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.முறைகேடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.