தயிர் கோடு பெலே


சாயந்திரங்களில் சுட சுட காபி அல்லது டீயுடன் கோடுபெலே மிகவும் ருசியாக இருக்கும்.
செய்யும் முறை: கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, ஒன்றரை லோட்டா சற்றே புளித்த தயிர் போட்டு கொதிக்க விடவும். தயிர் கொதிக்க துவங்கிய பின் ஒரு லோட்டா அரிசி மாவு போட்டு நன்றாக கலந்து சிறிய தீயில் சற்று வேக விடவும். ஈர கையால் தொட்டால் கைக்கு மாவு ஒட்டவில்லை என்றல் மாவு வெந்துள்ளது என அர்த்தம். பின்னர் நறுக்கிய கொத்துமல்லி போட்டு கலந்து பின்னர் நீண்ட உருளைகள் போல் செய்து முனைகளை இணைத்தால் வளையல் போல் வரும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பின்னர் மாவு வளையங்களை போட்டு வறுத்து எடுத்தால் தங்க நிறத்தில் சுட சுட தயிர் கோடு பெலே உண்பதற்கு தயார். இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மேலும் ருசியாக இருக்கும்.