தயிர் தோசை

தேவையான பொருட்கள்
அரிசி – இரண்டு கப்
தயிர் – முக்கால் கப்
தண்ணீர் – இரண்டு கப்
வெல்லம் – முக்கால் கப்
மோர் – இரண்டு கப்
உப்பு – ருசிக்கேற்ப
செய்யும் முறை: ஒரு கப் அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் கழுவவும். பின்னர் அந்த அரிசியை வாணலியில் 10 நிமிடங்கள் வரை அவல் மாதிரி ஆகும் வரை வறுத்து கொள்ளவும்.முக்கால் கப் தயிரை எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்னர் இதில் இரண்டு கப் நீரை ஊற்றி மீண்டும் கலக்கவும். இதில் வறுத்த அரிசியை போட்டு நான்கு மணி நேரம் ஊற விடவும் தனியாக இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசியை போட்டு நீரில் நான்கு மணி நேரம் ஊற விடவும். தயிர் மற்றும் நீர் இரண்டிலும் தனியாக ஊறவைத்த அரிசியை மற்றும் முக்கால் கப் வெல்லத்தை மிக்ஸியில் போட்டு நைசாக ருப்பி கொள்ளவும். தயிரை சிறிது சிறிதாகவே மாவு சரியான பதத்திற்கு வரும் வரை அரைத்து கொள்ளவும் . மாவு மிகவும் நீராக கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். தயாரான மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் காற்று சேராதவகையிலும் மூடி பன்னிரண்டு மணிநேரம் புளிக்க விடவும். பின்னர் இந்த மாவில் தேவைக்கேற்ப உப்பை சேர்த்து கலந்து தோசை சுடலாம். தோசை சுடும் முன்னர் தவாவில் அனைத்து பகுதியிலும் படரும் வகையில் எண்ணெய் தேய்க்கவும். பின்னர் மாவை சரியான விதத்தில் தவா முழுதும் படரும் வகையில் ஊற்றி தேய்க்கவும். பின்னர் மீண்டும் தோசையின் சுற்றுப்புறத்தில் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் தோசை வேகும் படி பார்த்து பின்னர் சிவந்த இந்த தோசையை சட்னி அல்லது வெண்ணெயுடன் பரிமாறலாம்.