தருமபுரி அருகே மாங்காய் பார லாரி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒன்பது பேர் காயம்

தர்மபுரி,ஜூன்.10-
தர்மபுரி மாவட்டம், மகநே்திரமங்கலம் அருகேவுள்ள வஜ்ஜிரப்பள்ளம் என்ற இடத்தில் மாங்காய் பாரம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று, சாலையோர பள்ளத்தில் பாய்ந்து மரத்தின் மீது மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் நான்கு பெண் கூலி தொழிலாளர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மகேந்திரமங்கலம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.