தருமபுரி பாமக வேட்பாளர்சவுமியா அன்புமணி முன்னிலை

தருமபுரி: ஜூன்4-
தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 25 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.தருமபுரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவின்படி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 25 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திமுக வேட்பாளர் மணி 12 ஆயிரத்து 64 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அசோகன் 10 ஆயிரத்து 64 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2,453 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 392 வாக்குகள் பதிவாகியுள்ளன. சவுமியா 13 ஆயிரத்து 364 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.