தரையிறங்கும் போது தள்ளாடிய விமானம்

லண்டன்:டிச.29- லண்டனில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென வீசிய பலத்த காற்றால் தள்ளாடியது. சரியாக தரையிறங்கும் போது காற்று வீசியதால் அந்த விமானம் தரையிறங்க முடியாமல் தள்ளாடும் சிசிடிவி காட்சி விமான பயணிகள் மத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்பயணத்தின் போது விமானங்கள் டர்புலன்ஸில் சிக்கி நடு வானில் குலுங்குவது குறித்த செய்திகளை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கலாம். விமானத்தில் டர்புலன்ஸின் போது விமானங்கள் குலுங்குவதால் பயணிகள் பீதியில் உறைவதும் சில நேரங்களில் பயணிகள் காயத்திற்கு உள்ளாகும் நிகழ்வுகளும் நடைபெறும்.
ஆனால், லண்டனில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அந்தரத்தில் தள்ளாடிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற விமானம் தான் இப்படி தரையிறங்கும் போது அந்தரத்தில் தள்ளாடியபடி ஒருவழியாக லேண்டிங் ஆகியிருக்கிறது. விமான பயணிகளையும் பார்ப்பவர்களையும் திகிலில் உறைய வைத்த இந்த சம்பவம்குறித்த விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு போயிங் 777- என்ற விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது திடீரென பலத்த காற்று வீசியது. இதனால், விமானம் தள்ளாடியது. விமானத்தில் இருந்த பயணிகள் திடீரென அங்கும் இங்கும் விமானம் அலைமோதுவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.