தர்மபுரி: இரும்பு பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

தர்மபுரி, செப்டம்பர் . 22 – தர்மபுரி மாவட்டம் சந்தைபேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் பச்சையப்பன் என்பவரது வீட்டில் இரண்டாவது மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் இலியாஸ் என்பவர் தனது வீட்டிற்கு புதிதாக இரண்டு இரும்பு பீரோல் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு இரும்பு பீரோக்களை தரை தளத்தில் இருந்து இரண்டாவது மாடிக்கு கயிறு கட்டி மேலே கொண்டு செல்ல இலியாஸ் உள்ளிட்டோர் முயற்சி செய்தனர். அப்போது இரும்பு பீரோவானது மாடியின் அருகில் உள்ள மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியதால் பீரோவில் மின்சாரம் பாய்ந்து. மின்சாரம் தாக்கியதில் ஓட்டுநர் கோபி மற்றும் இலியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சையப்பன் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி அருகே இரும்பு பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.