தர்மபுரி: டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


தர்மபுரி,ஜன.13-
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி,
தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் சார்பில், நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் கிராமத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான கிடங்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் துளசிங்கம், சிவாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள்
கஜேந்திரன், கேசவன் கோவிந்தன், ரங்கநாதன், மாதுஆடலரசு, பிரபு, சகாதேவன், அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகி முருகைய்யன் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மதுக்கூட ஒப்பந்ததாரர் அவர்களுக்கு தொடர்பானவர்கள் மற்றும் அதில் பணியாற்றும் பணியாளர்களால், டாஸ்மாக் பணியாளர்கள் தாக்கப்பட்டால் அந்த மதுகூடத்தின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் நுழைவு வாயில் தனித்து இருக்கும்படியும், மதுபான கூடத்தின் உள்ளே இருக்காத வகையில் தனிமைப்படுத்தி பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். டாஸ்மாக் கடையின் அரசு நிர்ணயித்த பணி நேரத்திலும் மற்ற நேரங்களிலும் மதுகூடங்களில் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து முறைபடுத்த வேண்டும். மதுக்கூடங்களின் மதுபான கடைகளின் நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு இரவு மதுபான கூடங்களின் சாவியை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கலால் துறையினர் மதுபான கடைகளில் மட்டுமே ஆய்வு செய்கிறார்கள், மதுபானக் கூடங்களில் நடக்கும் முறைகேடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மது கூடங்களில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கு அதிகபட்ச விலை பட்டியலை வெளிப்படையாக வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைக்காத மது கூட உரிமதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜெயபால், அருண், கோவிந்தசாமி, சுப்ரமணி உள்ளிட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.