தர்ஷன் பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரு, ஜூன் 19: ரேணுகாசாமியின் கொலை வழக்கில் 2-வது குற்றவாளியான நடிகர் தர்ஷன், கொலையில் தனது பெயரை மறைக்க ரூ.30 லட்சம் கொடுத்ததாக போலீஸாரிடம் தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், நடிகர் தர்ஷன் தானாக முன்வந்து அளித்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்த ரூ. 30 லட்சம் ரூபாய் கொடுத்தேன் என்றும், இந்த வழக்கில் தனது பெயர் எங்கும் வரக்கூடாது என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
போலீஸ், வழக்கறிஞர்கள் மற்றும் உடலை அப்புறப்படுத்துபவ‌ர்களின் செலவுகளை ஈடுகட்ட தர்ஷன் தானாக முன்வந்து பிரதுஷுக்கு ரூ. 30 லட்சம் கொடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பட்டகெரேயில் உள்ள கொட்டகையில் நடந்த தாக்குதலில் தான் ஈடுபட்டதாக தர்ஷன் ஒப்புக்கொள்ளவில்லை. ஜூன் 8 ஆம் தேதி இரவு தர்ஷன் தனது ஜீப்பில் ஷெட்டுக்கு வந்ததைக் கொட்டகையைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் காட்டியது.
கொலைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தர்ஷன் விருந்து வைத்துள்ளார் என்பதும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவருகிறது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டகெரேவில் உள்ள கொட்டகையில் உள்ள சிசிடிவி ஆதாரங்கள் எதையும் சேதப்படுத்த‌வில்லை.
நடிகர் தர்ஷன் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ரேணுகாசாமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ராகவேந்திரா ஆகியோரின் செல்பேசிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் உள்ளனர். இப்போது அருகில் உள்ள ராஜகால்வாயில் தேடுதவதற்காக தீயணைப்பு படை அணுகப்பட்டுள்ளது.
தொடர்ந்து 11 நாட்களாக இறந்த ரேணுகாசாமியின் மொபைலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி, ரேணுகாசாமி, குற்றவாளியான பிரதுஷ், ராகவேந்திரா ஆகியோரின் மொபைல் போனை எடுத்து, சுமனஹள்ளி ராஜகால்வாய் அருகே வீசினர்.
பட்டணகெரே ஷெட்டில் ரேணுகாசாமி தாக்கப்பட்டதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால், ரேணுகாசாமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ராகவேந்திராவின் மொபைல்கள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது. இருவரது மொபைல் போன்களையும் ராஜ் கால்வாயில் வீசியதாக பிரதுஷ் கூறியுள்ளார்.
அவர் சுட்டிக்காட்டிய சுமனஹள்ளி ராஜகால்வாய் அருகே போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிபிஎம்பி, துப்புரவு பணியாளர்கள் உதவியுடன், ராஜகால்வாயில் மொபைல்களை தேடியும் கிடைக்கவில்லை.
இந்த மொபைலை கண்டுபிடிக்குமாறு ராஜாஜிநகர் தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர்.
இதற்கிடையில், மொபைல் போனை வேறு இடத்தில் அப்புறப்படுத்தியதாகவோ அல்லது அழித்துவிட்டு, சுமனஹள்ளி ராஜகால்வாயில் வீசியதாகவோ கூறி போலீசாரை பிரதுஷ் தவறாக வழிநடத்தியிருக்கலாம். அல்லது அவர் விட்டுச் சென்ற மொபைல்களை துப்புரவுப் பணியாளர்கள் எடுத்துச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிற‌து.