தற்கொலைக்கு முன்பு தந்தையிடம் செல்போனில் பேசிய மாணவன்

பெங்களூர் : மார்ச் . 23 – கடந்த வியாழக்கிழமை அத்திகுப்பே மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சட்ட கல்லூரி முதலாண்டு மாணவர் துருவஜ்ட்டின் தக்கர் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னர் தன் தந்தைக்கு தான் சங்கடத்தில் இருப்பதாக போன் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பையில் வழக்கறிஞராய் பணியாற்றி வரும் துருவ ஜட்டின் தகாரின் தந்தை அவனை கப்பன் பூங்காவுக்கு செல்லும்படியும் அங்கு சென்றால் மனா அமைதி பெரும் என்று அறிவுறுத்தியுள்ளார் .தவிர தந்தை தன் மகனின் நண்பர்களுக்கும் போன் செய்து மகனை பார்த்துக்கொள்ளுமாறு கூறிஉள்ளார் என தெரிய வந்துள்ளது . தேசிய சட்ட கல்லூரியில் முதலாண்டு பி ஏ எல் எல் பி படித்து வந்த தக்கர் தன் தந்திக்கு போன் செய்து தனக்கு மனது சரியில்லை என்றும் தான் கல்லூரி ஹாஸ்டலை விட்டு வந்துவிட்டதகவும் தெரிவித்துள்ளான் . தவிர தான் இருக்கும் இடம் குறித்து வாட்ஸ் ஆப்பில் தந்தைக்கு அனுப்பியும் உள்ளான் .தவிர தன சக மாணவர்களிடம் தான் வெளியில் செல்வதாக தெரிவித்துள்ளன.
பொது சட்ட நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற நிலையில் துருவ தக்கருக்கு சட்ட கல்லூரியில் எளிதில் இடம் கிடைத்துள்ளது.

படிப்பில் மிகவும் திறமைசாலியான இவருக்கு மனஉளைச்சல் இருந்துள்ளது கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துருவ தக்கர் அத்திகுப்பே மெட்ரோ ரயில் நிலையத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளான் . தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இவன் உடல் கண்டெடுக்கப்பட்டது . பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்ட்டது .முதற்கட்ட விசாரணையில் இவன் சாவில் இவ்வித சூழ்ச்சியும் இல்லை என்று தெரியவந்திருப்பினும் இவன் மருந்துகள் உட்கொண்டிருந்ததாகவும் வை எதற்காக என்பதும் இன்னும் தெரிய வில்லை. தக்கர் மன உளைச்சலில் இருந்துள்ளதாகவும் இவனுடைய தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் அதிகரி ஒருவர் தெரிவித்தார் இவனுடைய மரணத்தால் அதிர்ச்சியில் உள்ள தக்கரின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தக்கர் மிகவும் சூட்சுமமானவன் மற்றும் எப்போதும் தனிமயில் இருப்பான் என்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.