தற்கொலை தாக்குதலுக்கு சதி

மங்களூர் : நவம்பர். 21 – மங்களூர் குக்கர் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக தற்போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது . சந்தேகத்துக்குரிய தீவிரவாதி ஷாரீக் தற்கொலை தாக்குதலுக்கு திட்டம் தீட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது . தவிர இந்த வழக்கு தொடர்பாக ஷாரீக் உட்பட மொத்தம் நான்கு பேரை போலீசார் தங்கள் வசம் எடுத்துள்ளனர். தவிர ஷாரீக்கை அடையாளம் காட்ட இன்று காலை மங்களூருக்கு வந்த அவனுடைய பெற்றோர் அவனை அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர். வெடிகுண்டால் உடல் முழுக்க 40 சதவிகித காயமடைந்து தற்போது மங்களூரில் தனியார் மருத்துவமனையில் ஷாரீக் சிகிச்சை பெற்று வருகிறான். இவனை அடையாளம் காட்ட இன்று காலை அவனுடைய பெற்றோர் மங்களூருக்கு வந்தனர். ஒரு வேளை இவர்களுக்கு ஷாரீக்கை அடையாளம் காண முடியவில்லை என்றால் டி ஏன் ஏ சோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் இப்போது ஷாரீக்கை அவனுடைய பெற்றோர் அடையாளம் கண்டு உறுதிசெய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மைசூரில் ஷாரீக்குடன் இரண்டு பேர் மற்றும் ஊட்டியில் ஒருவனை போலீசார் தங்கள் வசம் எடுத்துள்ளனர். இதனால் இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. தவிர இந்த வெடி குண்டு வழக்கு தொடர்பாக ஷாரீக் தான் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2020ல் மங்களூரில் பிஜாய் என்ற இடத்தில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த அல் கொய்தா இயக்கத்திற்கு ஆதரவான எழுத்துக்களால் ஷாரீக் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தான் . இந்த நிலையில் தேசிய புலணாய்வு முகமத்திடம் சிக்கி சாவதை விட தற்கொலை வெடிகுண்டாக மாற முடிவு செய்திருந்தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவிர இந்த காரணத்திற்காகவே மங்களூரில் தற்கொலை வெடி குண்டு வெடிக்க செய்ய திட்டமிட்டிருந்தான். தவிர இதற்கு முன்னர் பல இடங்களில் வெடி குண்டு வெடிப்பு சோதனைகளும் செய்துள்ளான் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தவிர சிவமொக்கா கலவரங்களில் இவனுடைய பெயர்கள் அடிபட்டிருந்தது. ஏன் ஐ ஏவும் இது குறித்து தேடுதல் வேட்டை நடத்தியிருந்தது. தவிர மங்களூரில் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக தீர்த்தஹள்ளி சொப்புகட்டே என்ற இடத்தில் உள்ள ஷாரீக் வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் போலீசார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைகள் செய்துள்ளனர்.
மங்களூரில் வெடிகுண்டு வெடிக்க சதி செய்த குற்றவாளி ஷாரீக் மொபைல்கள் குறித்து பயிற்சி பெற மைசூருக்கு வந்து சென்றிருப்பது மங்களூர் மற்றும் மைசூர் போலிஸாரின் கூட்டு விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளி ஷாரீக் குக்கர் வெடிகுண்டை தயாரிக்கும் முன்னர் மைசூரில் மொபைல் பழுது பார்க்கும் கடையில் சேர்ந்துள்ளான் . மொபைல்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்துள்ளான். மைசூரில் லோக நாயகா நகரில் உள்ள தன் அறையில் உட்கார்ந்து குக்கர் வெடி குண்டுகள் தயாரிப்பது குறித்து பயிற்சிகள் செய்துள்ளான். யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குற்றவாளி திட்டங்கள் தீட்டி வீட்டின் பின்பகுதியிலேயே அறையை வாடகைக்கு எடுத்திருந்தான் . என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது குற்றவாளி ஷாரீக் குறித்து மங்களூர் மைசூர் போலீசார் மேலும் இவனிடமிருந்து தகவல்களை பெற விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாரீக் மைசூரிலேயே வெடி குண்டை தயாரித்து கொண்டுவந்துள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது . பஸ்ஸிலேயே குற்றவாளி ஷாரீக் குக்கர் வெடி குண்டை கொண்டுவந்துள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது. மைசூர் , குஷால்நகர் , மடிகேரி , சூல்யா, புத்தூர் ,மார்கமாக குற்றவாளி ஷாரீக் மங்களூருக்கு வந்துள்ளான். மங்களூரில் பம்ப் வெல் அருகில் பஸ்ஸிலிருந்து அவன் இறங்கிய தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.