தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேற வைத்த தடுப்பூசி திட்டம்

காபூல், செப். 15- ஆப்கனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கன் தலைநகர் காபூலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பன்ஸ்ரீ லால் அரன்தே மருந்து சார்ந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் டில்லியில் உள்ளனர். இவர் நேற்று காலை 8 மணியளவில், கடையில், ஊழியருடன் இணைந்து வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் இருவரையும் கடத்திச் சென்றனர். ஆனால், கடை ஊழியர் அவர்களிடம் இருந்து தப்பி வந்தார். இருவரையும், கடத்தல்காரர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விசாரணை அமைப்பினர், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.