தலித் பெண் படுகொலை

குடகு, மார்ச்.15- காதலித்து திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் தலித் பெண் படுகொலை செய்யப்பட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷாலநகரில் இந்த சம்பவம் நடந்தது.தலித் என்ற காரணத்தால், புதுமணப் பெண்ணை கணவர் குடும்பத்தினர் கொன்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர்
அக்ஷிதா (18). இவர் தலித் என்பதால், கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது ஹேமந்த் அக்ஷிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணமகன் உயர் வகுப்பை சேர்ந்தவர்.மூன்று நாட்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் இதற்கு மணமகன் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த படுகொலை செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹேமந்தின் பெற்றோர் தசரதா மற்றும் கிரிஜா ஆகியோர் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சடலத்தை குசாலாநகர் சமூக சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்து, குசாலாநகர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.